சென்னை:-அன்பு, காதல் கிசுகிசு படங்களில் நடித்தவர் பாலா. கடைசியாக அவரது அண்ணன் சிவா இயக்கிய வீரம் படத்தில் அஜீத்துடன் நடித்தார். பாலாவுக்கு தமிழில் அதிக வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் மலையாளத்தில் பிசியான நடிகர். இதுவரை 60 படங்களில் நடித்துள்ளார். பாலாவுக்கும் மலையாள பின்னணி பாடகி அம்ருதாவுக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இருவரும் கொச்சி அருகே உள்ள பலாரி என்ற இடத்தில் சொந்தமாக வீடு வாங்கி வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு சுமார் 12 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று பாலாவின் வீட்டுக்குள் நுழைந்து அங்குள்ள பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தியது. பாலாவை உருட்டுக் கட்டையால் தாக்கியது. பாலாவின் மனைவி அவரை விட்டுவிடும்படி கெஞ்சியிருக்கிறார். அவரது சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஓடி வரவும் அந்த கும்பல் தப்பி ஓடிவிட்டது.
மர்ம கும்பல் ஒன்று தன்னை தாக்கிவிட்டு வீட்டை கொள்ளையடிக்க முயன்றதாக பாலா போலீசில் புகார் செய்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி