இதற்கிடையில், நாயகியின் வளர்ப்பு தந்தை அவளை திருமணம் செய்துகொள்ள நினைக்கிறார். இதற்கு நாயகி எதிர்ப்பு தெரிவிக்கிறாள். ஒரு கட்டத்தில் தனது தவறை உணர்ந்த, வளர்ப்பு தந்தை நாயகிக்கு பிடித்தவனையே திருமணம் செய்துவைக்க சம்மதம் தெரிவிக்கிறார். அதன்படி, நாயகன்-நாயகி திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. இந்நிலையில், அதே ஊரில் பெரிய ரவுடிகளாக இருக்கும் இருவரிடமும் நாயகியை காதலிக்க வைப்பதாக கூறி, அவர்களிடம் நிறைய பணத்தை கறக்கிறான் நாயகனின் நண்பன் சடையன்.ஆனால், நாயகனுக்கும், நாயகிக்கும் திருமணம் நடைபெறவிருக்கிறது என்ற செய்தி அறிந்ததும், இரண்டு ரவுடிகளும் சடையனை கொலை செய்ய ஆட்களை ஏவி விடுகின்றனர். இறுதியில், நாயகனுக்கும்-நாயகிக்கும் கல்யாணம் நடந்ததா? சடையனை அந்த ரவுடிகள் கொன்றார்களா? என்பதே மீதிக்கதை.
நாயகன் ஹேமந்த் படம் முழுக்க முகத்தில் பவுடர் பூசிக்கொண்டு ஃபுல் மேக்கப்புடன் வலம் வருகிறார். ஆனால், முகத்தில் நடிப்பை வரவழைக்கத்தான் ரொம்பவும் தடுமாறியிருக்கிறார். காதல் காட்சிகளிலாவது ஓரளவு நடிப்பார் என எதிர்பார்த்தால், அதிலும் மிகையான நடிப்பையே வெளிப்படுத்தியிருக்கிறார். ஆனால், பாடல் காட்சிகளில் அழகாக நடனமாடியிருக்கிறார்.நாயகி அவந்திகா மேனன் கதாநாயகிக்குண்டான அழகுடன் வலம் வந்தாலும், அவரை நாயகியாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. நடிப்பிலும் இன்னும் கொஞ்சம் தேறவேண்டும்.நாயகனின் நண்பனாக வரும் சடையன், நாயகனைவிட அதிக காட்சிகளில் இடம்பெற்றிருக்கிறார். ஒரே தோரணையில் வசனத்தை பேசி போரடிக்கிறார். சடை முடியோடு இவர் வரும் காட்சிகள் கலகலப்பாக இருந்தாலும் ரசிக்க முடியவில்லை.
ஆலமரம் ஒரு பேய் படம் என்று நம்பி சென்றவர்களுக்கு ஏமாற்றத்தையே கொடுத்திருக்கிறார் இயக்குனர் எஸ்.என்.துரைசிங். ஆலமரத்தில் பேய் இருக்கிறது என்று பெயருக்கு சொல்லி, அதற்குண்டான பயத்தை ரசிகர்களுக்கு கொடுக்க தவறியிருக்கிறார் இயக்குனர். காதல் காட்சிகளையும் வலுவாக சொல்லாமல் சொதப்பியிருக்கிறார். ஒளிப்பதிவாளர் உதய்சங்கர் கேமரா கோணங்களை வித்தியாசமாக வைத்து காட்சிகளை வேறுபடுத்தி காட்ட முயற்சி செய்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் இவரது கேமரா பளிச்சிடுகிறது. ராம்ஜீவன் இசையில் பாடல்கள் பரவாயில்லை. பின்னணி இசை சுமார் ரகம்தான்.
மொத்தத்தில் ‘ஆலமரம்’ கற்பனை…………
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி