செய்திகள்,திரையுலகம் நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்!…

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்!…

நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்!… post thumbnail image
சென்னை:-கதாநாயகிகளின் இந்த வருடத்திய சம்பள பட்டியல் வெளியாகியுள்ளது. பல நடிகைகள் இளம் கதாநாயகர்கள் சம்பளத்தைவிட அதிகம் வாங்குகிறார்கள். கடந்த வருடம் வரை முன்னணி நடிகைகள் பலருடைய சம்பளம் ரூ.1 கோடிக்கு கீழ்தான் இருந்தது. இந்த வருடம் ரூ.2 கோடியை எட்டி உள்ளது.

நயன்தாராதான் இதுவரை அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் முதல் இடத்தில் இருந்தார். தற்போது அவரை பின்னுக்கு தள்ளி விட்டு அனுஷ்கா முதலாவதாக வந்துள்ளார். தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக இருக்கும் அவர் ரூ.2 கோடியில் இருந்து 2½ கோடி வரை வாங்குகிறாராம்.நயன்தாரா ரூ.1½ கோடி வரை சம்பளம் பெறுகிறார். சமந்தா ஒரு படத்துக்கு ரூ.1½ கோடியில் இருந்து ரூ.2 கோடி வரை சம்பளம் நிர்ணயிக்கிறாராம்.

காஜல்அகர்வால் ரூ.1 கோடி முதல் ரூ.1½ கோடி வரை வாங்குகிறார். சுருதிஹாசன் ரூ.1 கோடி சம்பளம் வாங்குகிறார். ஹன்சிகா ரூ.75 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை சம்பளம் பெறுகிறார். தமன்னா ரூ.1 கோடி சம்பளம் வாங்குகிறார். திரிஷா ரூ.1 கோடி சம்பளம் வாங்குகிறார். அஞ்சலி ரூ.70 லட்சமும், நித்யாமேனன், பிரியாமணி, டாப்சி போன்றோர் ரூ. 50 லட்சமும் சம்பளம் பெறுகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி