பெங்களூர்:-மின்னஞ்சல் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் யாஹு நிறுவனம் தங்களது பெங்களூர் கிளையில் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்துள்ளது. தங்களது மென்பொருள் அபிவிருத்தி மையத்தில் பணிபுரியும் இந்த ஊழியர்களில் 400 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப அந்நிறுவனம் முடிவெடுத்துள்ளது. தங்களது நிர்வாக செலவுகளை குறைக்கும் நோக்கிலும், வளர்ச்சிக்கான புதிய வழிவகைகளை ஊக்குவிக்கும் பொருட்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து யாஹு நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நிலையான வளர்ச்சியை நோக்கி யாஹு செல்வதை உறுதிசெய்யும் பொருட்டும், அதிக அளவிலான திறமையுடன் சாதனை படைக்கும் வகையிலும் ஒத்துழைப்பு மற்றும் கண்டுபிடிப்புகளை நிகழ்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு ஏதுவாக, நாங்கள் சில மாற்றங்களை செய்ய முடிவெடுத்து அதனை செயல்படுத்தியுள்ளோம் என கூறியுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி