செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் இரு அமெரிக்கர்கள் மற்றும் ஜெர்மானியர் ஒருவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு!…

இரு அமெரிக்கர்கள் மற்றும் ஜெர்மானியர் ஒருவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு!…

இரு அமெரிக்கர்கள் மற்றும் ஜெர்மானியர் ஒருவருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு!… post thumbnail image
ஸ்டாக்ஹோம்:-அமெரிக்காவை சேர்ந்த எரிக் பெட்சிக் மற்றும் வில்லியம் மொயர்னர், ஜெர்மனியை சேர்ந்த ஸ்டெபான் ஹெல் ஆகியோர் வேதியியல் பிரிவில் 2014 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசை வென்றுள்ளனர். விஞ்ஞானி எரிக் பெட்ஸிக் அமெரிக்காவின் ஆஷ்பர்னிலுள்ள ஹோவார்டு ஹுயூஸ் மருத்துவ நிறுவனத்திலும், விஞ்ஞானி வில்லியம் மொயர்னர் ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்திலும், விஞ்ஞானி ஸ்டெபான் ஹெல், மேக்ஸ் பிளாங்க் உயிரி இயற்பியல் வேதியியல் நிறுவனத்திலும் பணிபுரிகின்றனர்.

இவர்கள் ஆப்டிக்கல் மைக்ரோஸ்கோப்பை புளுரோசென்ட் மூலக்கூறுகள் மூலம் நானோ பரிமாணத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த சாதனைக்காகவே இவர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி