அதற்கு முன்பாகவே விஜய் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் ‘கத்தி’ படத்தின் ஆண்ட்ராய்டு கேம் வெளியிடப்பட்டுள்ளது. ‘3டி’யில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த கேமில் விஜய்யின் சண்டைக்காட்சிகள் ரசிகர்களைக் கவரும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மொபைல் ஃபோன் வைத்திருப்பவர்கள் கூகுள் பிளே ஸ்டோருக்கு சென்று இந்த கேம்மை டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம்.
இதற்கு முன்பு கோச்சடையான், சைவம், அஞ்சான், ஆகிய படங்களுக்கு மொபைல் கேம் வெளியிட்டப்பட்டது. இப்போது அந்த வரிசையில் விஜய்யின் ‘கத்தி’ படமும் இணைந்துள்ளது. தீபாவளிக்கு வெளியாகவுள்ள கத்தி படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி தமிழகமே மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி