சென்னை:-ஷங்கர் இயக்கத்தில் மிகப் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள ‘ஐ’ படத்தின் படப்பிடிப்புக்கள் முடிந்து, இறுதிக்கட்ட பணிகள் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் இப்படத்தை ரிலீஸ் செய்ய ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.
இதனால் படத்திற்காக தமிழ் மற்றும் தெலுங்கில் டப்பிங் வேலைகளை முடித்து விட்ட படத்தின் ஹீரோவான விக்ரம், இந்தியில் டப்பிங் பேசுவதற்காக மும்பையில் முகாமிட்டுள்ளார். இன்னும் இரண்டு நாட்களில் இந்தி டப்பிங் முடிந்து விடும் என்பதால் அந்த வேலைகளில் படுபிஸியாக இருக்கிறாராம் விக்ரம்.ஐ படம் தீபாவளிக்கு ரிலீசாவது இன்னும் உறுதி செய்யப்படாததால் ஐ படத்தின் இந்தி டப்பிங் பேசும் வேலைகளுடன் விஜய் மில்டனின் பத்து எண்றதுக்குள்ள படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புகளிலும் கலந்து கொண்டு வருகிறார் விக்ரம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி