எபோலா வைரஸ்க்கு எதிரான பணிக்கு இந்தியா 12.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கியுள்ளது. இதுதொடர்பான ஆவணங்களை அமெரிக்க செயலாளர் ஜான் கெர்ரி வெளியிட்டுள்ளார்.
எபோலா வைரஸ்க்கு எதிரான பணிக்கு அமெரிக்கா 113.8 மில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது. அடுத்தப்படியாக ஐரோப்பிய யூனியன் 55.5 மில்லியன் அமெரிக்க டாலரும், கனடா 31.9 மில்லியன் அமெரிக்க டாலரும், நெதர்லாந்து 21 மில்லியன் அமெரிக்க டாலரும், இந்தியா 12.5 மில்லியன் அமெரிக்க டாலரும் வழங்கியுள்ளது. பிரிட்டிஷ் செயலாளருடன் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஜான் கெர்ரி கொடிய நோயான எபோலாவிற்கு எதிராக போராட அதிகமான நாடுகள் தங்களது பங்களிப்பை அளித்துள்ளன என்று தெரிவித்துள்ளார்.
எபோலாவிற்கு எதிரான நடவடிக்கைக்கு ஐ.நா.விற்கு 1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் உடனடியாக தேவை என்று ஜான் கெர்ரி தெரிவித்துள்ளார். மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் உயிர் கொல்லி நோயான ‘எபோலா வைரஸ்’ பரவி உள்ளது. இந்த நோய்க்கு அங்கு 3,865 உயிரிழந்து உள்ளனர். 8,033 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எபோலா நோய், மேற்கு ஆப்பிரிக்காவை தாண்டி பரவுவது தவிர்க்க முடியாதது என்று அமெரிக்க சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அங்கு எபோலா தொற்று ஏற்படாமல் இருக்க பல உதவிகளை ஐ.நா. செய்து வருகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி