சென்னை:-தென்னிந்திய சினிமாவின் வசூல் சக்கரவர்த்தி நடிகர் விஜய் தான். இவர் நடிக்கும் படங்கள் கண்டிப்பாக தயாரிப்பாளருக்கு மினிமம் கேரண்டி என்பார்கள். இவரின் ரசிகர் பலம் அறிந்த அடுத்த கட்ட நடிகர்கள் தங்கள் படங்களை, விஜய்க்கு போட்டியாக ரிலிஸ் செய்ய தயங்குவார்கள்.
ஆனால் வரும் தீபாவளி அன்று கத்தி படத்துடன், ஜெயம் ரவி நடித்த பூலோகம் படமும் வெளிவருகிறது என நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பூலோகம் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தான், இவர் தயாரித்த ‘ஐ’ படம் நவம்பர் மாதம் தள்ளி போவதால் திடீரென்று இந்த முடிவை எடுத்துள்ளார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி