ஏழுமலையானுக்கு நாளை காலை சுப்ரபாத சேவை, தோமாலை அர்ச்சனைக்கு பிறகு 6 மணி முதல் 9.30 மணி வரை தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.அதன் பிறகு கோவில் நடை மூடப்படுகிறது. 10 மணி நேரத்துக்கு பிறகு இரவு 8 மணிக்கு நடை திறக்கப்பட்டு கோவில் தூய்மைப்படுத்தப்படுகிறது. பரிகார பூஜைக்கு பின் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
எப்போதும் இல்லாத வகையில் இந்த முறை கோவிலில் அன்னதானமும் நிறுத்தப்படுகிறது. சந்திர கிரகணத்தின்போது சமைக்க கூடாது என்பதால் அன்னதானம் நிறுத்தப்படுகிறது.
இதேபோல் ஆந்திராவில் உள்ள அனைத்து முக்கிய கோவில்களும் கிரகணத்தின்போது மூடப்படுகிறது. ஆனால் காளஹஸ்தி வாயுலிங்கேஸ்வரர் கோவில் ராகு கேது பரிகார தலம் என்பதால் இங்கு கிரகண கால பூஜை நடக்கிறது. இதில் பங்கேற்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது என கருதப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி