எனவே அவரை போலீசார் கைது செய்தனர். அதை தொடர்ந்து அவருக்கு பிரச்சினைகள் தொடங்கின.இவர் மது குடித்து விட்டு போதையில் கார் ஓட்டியதற்காக அவரை அமெரிக்க நீச்சல் கழகம் 6 மாதம் சஸ்பெண்டு செய்துள்ளது.இந்த தடை அடுத்த ஆண்டு ஏப்ரல் 6ம் தேதி வரை உள்ளது. எனவே இந்த காலங்களில் அவர் அனைத்து நீச்சல் போட்டிகளிலும் பங்கேற்க முடியாது.அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதம் ரஷியாவின் காஷான் நகரில் உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது. அதில் பங்கேற்க அவரை தேர்வு செய்ய போவதில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது மைக்கேல் பெல்ப்சுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
லண்டன் ஒலிம்பிக் போட்டியை தொடர்ந்து நீச்சல் போட்டியில் இருந்து ஓய்வு பெற போவதாக பெல்ப்ஸ் அறிவித்து இருந்தார். இருந்தும் ஏப்ரல் மாதம் நடந்த போட்டியில் பங்கேற்றார்.
இதற்கு முன்பு 2004ம் அண்டில் மெரிலேண்டில் இதே போன்று மது அருந்தி விட்டு கார் ஓட்டியபோது போலீசிடம் சிக்கினார். அப்போது குற்றம் நிரூபிக்கப்பட்டு 18 மாதம் நடத்தை விதிமுறை தண்டனை பெற்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி