செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் மூளை செல்கள் ஆராய்ச்சிக்காக 3 பேருக்கு மருத்துவ நோபல் பரிசு!…

மூளை செல்கள் ஆராய்ச்சிக்காக 3 பேருக்கு மருத்துவ நோபல் பரிசு!…

மூளை செல்கள் ஆராய்ச்சிக்காக 3 பேருக்கு மருத்துவ நோபல் பரிசு!… post thumbnail image
ஸ்டாக்ஹோம்:-மூளை செல்கள் தொடர்பான கண்டுபிடிப்புக்காக அமெரிக்காவைச் சேர்ந்த நரம்பியல் விஞ்ஞானி ஜான் ஓ கீஃப், நார்வே அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகளான எட்வர்டு ஐ மோசர் அவரது மனைவி மே பிரிட் மோசர் ஆகியோருக்கு இந்த ஆண்டு மருத்துவத்துறைக்கான நோபல்நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நோபல் பரிசுக்குழு இந்த நோபல் பரிசை அறிவித்தது.
நம்மைச் சுற்றியுள்ள இடத்தின் வரைபடத்தை மூளை உருவாக்கும் விதம் மற்றும் சிக்கலான சூழ்நிலையில் அதற்கேற்ப நம்மை எப்படி வழிநடத்தி செல்கிறது? என்பதை விளக்குவதற்கு இவர்களின் கண்டுபிடிப்புகள் உதவியாக இருக்கும் என்று நோபல் பரிசுக்குழு தெரிவித்துள்ளது.மருத்துவ நோபல் பரிசுக்குரிய 1.1 மில்லியன் டாலர் பரிசுத்தொகையில் பாதி தொகை ஜான் ஓ கீஃபுக்கு வழங்கப்படும். மீதி தொகை நார்வே தம்பதியருக்கு வழங்கப்படுகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி