செய்திகள்,திரையுலகம் பேங் பேங் (2014) திரை விமர்சனம்…

பேங் பேங் (2014) திரை விமர்சனம்…

பேங் பேங் (2014) திரை விமர்சனம்… post thumbnail image
ஷிம்லாவில் உள்ள வங்கி ஒன்றில் வரவேற்பாளராக பணிபுரிகிறார் ஹர்லீன். தனது பாட்டியுடன் வசித்து வரும் ஹர்லீன், மிகவும் சலிப்பான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்.இந்நிலையில் இணையதளம் மூலம் அறிமுகமாகும் ராஜ்வீர் என்பருடன் அவளுக்கு காதல் ஏற்படுகிறது. அழகாகவும், இனிமையாகவும் பழகும், அதே சமயம் உணர்ச்சி வசப்படும் தன்மை கொண்ட ராஜ்வீரை அவள் நேரில் சந்திக்க நினைக்கிறாள்.

ஹர்லீன், ராஜ்வீரை சந்திக்க செல்லும் போது மக்கள் அவனை துரத்தி தாக்கி கொண்டுள்ளனர். அதனைப் பார்த்து அதிர்ச்சி அடையும் ஹர்லீன் வீட்டிற்கு திரும்ப நினைக்கிறாள். ஆனால், அங்குள்ள மக்கள் அவளையும் சர்வதேச குற்றவாளி என முடிவு செய்து துரத்துகின்றனர். அப்போது தான், தான் காதலிக்கும் ராஜ்வீர் லண்டனில் இருந்து கோஹினூர் வைரத்தை திருடி வந்துள்ளான் என்பது தெரிய வருகிறது. இந்திய போலீஸ் ஒருபுறமும், சர்வதேச போலீஸ் ஒருபுறமும், பயங்கரவாதிகளான உமரின் கும்பல் ஒருபுறமும் துரத்துகிறது.இந்நிலையில் ஹலீனும் ராஜ்வீரும் காதலில் வெற்றி பெறுகிறார்களா? தங்களை துரத்தும் கும்பலிடம் இருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள்? என்பது தான் பேங் பேங் படத்தின் மீதிக்கதை.

ஹர்லீனாவாக கத்ரினா கைப்பும், ராஜ்வீராக ஹிருத்திக்கும், பயங்கரவாதி உமராக டேன்னியும் நடித்துள்ளனர். தற்கால ரசிகர்களை கவரும் அம்சங்களான கார் சேஸிங், துப்பாக்கி சண்டை, அதிரடி ஆக்ஷன் சண்டை காட்சிகள் என பல வித அம்சங்களை புகுத்தி உள்ளார். குறிப்பாக அபுதாபி சாலையில் எஃப் 1 கார் பந்தய காட்சிகள் மிக அற்புதமாக படமாக்கப்பட்டுள்ளது. முதல் பாதி கொஞ்சம் போர் அடிப்பது போல் இருந்தாலும், இரண்டாவது பாதியில் விறுவிறுப்பு நிறைந்ததாக உள்ளது.ஹிருத்திக்-கத்ரினா இடையே ஜோடி நன்றாக உள்ளது. விஷால் ஷேகரின் இசையில் பாடல்கள் அனைத்தும் படம் வெளிவருவதற்கு முன்னரே ஹிட்டாகி விட்டன. ஹிருத்திக் வழக்கம் போல் மிக சர்வ சாதாரணமாக தனது கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். தூம் 2ல் இருந்ததை விட தனது இமேஜை அதிகப்படுத்தும் விதமாக ராஜ்வீர் கதாபாத்திரத்தில் நன்றாக பொருந்தி உள்ளார். ஹர்லீனாக வரும் கத்ரீனாவின் அப்பாவி தனமான அழகான தோற்றம், ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக அமைந்துள்ளது. டன்னியும், ஜாவீத் ஜாஃப்பரியும் நடிப்பில் மிரட்டி உள்ளனர். அரசு ஏஜென்ட்டாக வரும் பவன் மல்கோத்ரா, மீண்டும் தனது நடிப்பு திறமையை நிலைநிறுத்தி உள்ளார்.

மொத்தத்தில் ‘பேங் பேங்’ அதிரடி…………

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி