மேலும் சில படங்களுக்கு அவரது பிரபலமான வசனங்கள் வைக்கப்பட்டிருக்கும் நிலையில், வடிவேலு பேசி இன்றைக்கும் இளவட்டங்கள் பேசிக்கொண்டிருக்கும் வந்துட்டான்ய்யா வந்துட்டான்ய்யா என்ற வார்த்தையை தற்போது ஒரு படத்துக்கு தலைப்பாக வைத்துள்ளனர். அந்த படத்தில் புதுமுகங்கள் நடித்தபோதும், டைரக்டர்கள் ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்களாம்.
கதைப்படி, ஒரு காட்சியில் வயதான தோற்றத்தில் தோன்றும் ஆர்.சுந்தர்ராஜன், ஆர்.வி.உதயகுமார் இருவரும் நாம் மீண்டும் இளமையாக மாறினால் எப்படி இருககும் என்று நினைத்துப்பார்ப்பது போன்று ஒரு பாடல் காட்சி இடம்பெற்றிருக்கிறதாம். அந்த காட்சியில் இன்றைய இளவட்டங்கள் அணிந்து செல்வது போன்ற ஜீன்ஸ் டீசர்ட் அணிந்தபடி பீட்சா, பர்கர் என சாப்பிட்டபடி லேப்டாப், செல்போன் என்று அலைவது போன்ற அந்த பாடலில் நடித்துள்ளார்களாம். இநத பாடலிலும் வந்துட்டான்யா வந்துட்டான்யா என்ற வார்த்தை அடிக்கடி ரிப்பீட்டு செய்யப்படுகிறதாம்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி