செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் விமானத்தில் தனியாக பயணித்து உலகை சுற்றி வந்த முதல் பெண் விமானி மரணம்!…

விமானத்தில் தனியாக பயணித்து உலகை சுற்றி வந்த முதல் பெண் விமானி மரணம்!…

விமானத்தில் தனியாக பயணித்து உலகை சுற்றி வந்த முதல் பெண் விமானி மரணம்!… post thumbnail image
க்ளீவ்லான்ட்:-விமானத்தில் தனியாக பயணித்து உலகை சுற்றி வந்த முதல் பெண் விமானியான ஜெரால்டைன் ஜெர்ரி மாக் தனது 88வது வயதில் நேற்று முன்தினம் மரணமடைந்தார்.ப்ளோரிடாவில் உள்ள அவரது இல்லத்தில் ஜெரால்டைன் மரணத்தை தழுவியதாக அவரது தோழியான மேரி கெல்லி கூறியுள்ளார். 1964 ஆம் ஆண்டு மார்ச் 19ம் தேதியன்று தனது 38வது வயதில் செஸ்னா 180 என்ற சிறிய ரக விமானத்தில் “ஸ்பிரிட் ஆப் கொலம்பஸ்” என்று பெயரிட்டு ஓஹியோவில் உள்ள கொலம்பஸ் விமான நிலையத்தில் இருந்து உலகை சுற்றி வர ஜெரால்டைன் கிளம்பினார்.

5 அடி உயரமும், 45 கிலோ எடை கொண்ட அவர் 29 நாட்கள் விமானத்தில் பயணம் செய்து 23,103 மைல் தூரத்தை கடந்து வெற்றிகரமாக மீண்டும் கொலம்பசுக்கு திரும்பினார். ஓஹியோ பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிகல் என்ஜினியரிங் படித்த முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்ற ஜெரால்டைன் 1958 ஆம் ஆண்டிலிருந்து விமானத்தில் பறந்து வந்தார். அப்போது அவருக்கு 32 வயது தான் இருக்கும். தான் விமானத்தில் உலகை சுற்றி வந்த அனுபவத்தை புத்தகமாக ‘த்ரீ-எய்ட் சார்லி’ என்ற பெயரிட்டு அவர் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி