அதையடுத்து, அமீர்கான் மீது வழக்கும் தொடரப்பட்டது. அதனால் பின்னர் அந்த சர்ச்சையில் இருந்து விடுபட, இரண்டாவது போஸ்டரில் தன் உடம்பில் ஒரு சின்ன பகுதிகூட தெரியாத அளவுக்கு புல்லும் கவர் பண்ணிய ஒரு ஆடை அணிந்து போஸ் கொடுத்திருந்தார் அமீர்கான்.இருப்பினும், அந்த முதல் போஸ்டர் குறித்து இப்போதும் பாலிவுட் நட்சத்திரங்கள் அமீர்கானைப் பார்த்து கிண்டல் செய்து வருகிறார்களாம்.
அதில் ஹிருத்திக் ரோஷன், தனது டுவிட்டரில் அமீர்கானிடம், பி.கே படத்தில் நீங்கள் கையில் வைத்திருக்கும் டிரான்ஸ்சிஸ்டரை கீழே வைப்பீர்களா… என்று கிண்டலாக கேள்வி கேட்டுள்ளார்.
அதற்கு பதில் அளிக்கும் விதமாக, ஏன் முடியாது. இதோ செய்து காட்டுகிறேன் என்று சொல்லி தனது இரண்டாவது போஸ்டரை டுவிட்டரில் வெளியிட்டு ஹிருத்திக்கிற்கு பதில் கொடுத்துள்ளார் அமீர்கான்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி