செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் வயதானவர்கள் வாழத் தகுந்த நாடு நார்வே – சர்வே தகவல்!…

வயதானவர்கள் வாழத் தகுந்த நாடு நார்வே – சர்வே தகவல்!…

வயதானவர்கள் வாழத் தகுந்த நாடு நார்வே – சர்வே தகவல்!… post thumbnail image
நார்வே:-உலகில் உள்ள 96 நாடுகளில் வாழும் முதியவர்களின் வாழ்க்கைத் தரத்தை சர்வதேச ஹெல்ப்ஏஜ் குளோபல் ஏஜ்வாட்ச் அமைப்பு கணிப்பீடு செய்துள்ளது. இந்த முடிவின்படி வயதானவர்கள் வாழ்வதற்கு சிறந்த இடம் என்ற பெருமையை நார்வே பெறுகின்றது. இவர்களின் சமூக மற்றும் பொருளாதார நலன்களின் அடிப்படையில் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

முதியவர்களுக்கான ஐ.நா. சர்வதேச தினத்தன்று வெளியிடப்பட்டுள்ள இந்தக் கருத்துக் கணிப்புகள் ஆஸ்திரேலியா, மேற்கு ஐரோப்பா, வடக்கு அமெரிக்கா போன்ற இடங்களுக்கு உயர்ந்த தகுதிகளையும் ஆப்கானிஸ்தானிற்கு கடைசி இடத்தையும் வழங்குகின்றது. நார்வேக்குப் பிறகு ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, கனடா, ஜெர்மனி ஆகிய நாடுகள் சிறந்த இடங்கள் வரிசையைப் பெறுகின்றன.
வருமான பாதுகாப்பு, சுகாதாரம், தனிப்பட்ட திறன் மற்றும் செயல்திறன் மிக்க சூழலிலான வாழ்க்கை என்ற நான்கு பிரிவுகளில் இந்த சர்வே மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் 2030-ம் ஆண்டிற்குள் உலகம் முழுவதிலுமான 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் எண்ணிக்கை 1.4 பில்லியனைத் தொடும் என்று ஐ.நா. சர்வே குறிப்பிடுகின்றது.

2050-ம் ஆண்டிற்குள் உலக மக்கள் தொகையில் 21 சதவிகிதத்தினர் 60 வயதுக்கு மேற்பட்டவர்களாக இருப்பார்கள் என்றும், இந்த கணக்கீடு எடுக்கப்பட்டுள்ள 40 நாடுகளில் அவர்களின் எண்ணிக்கை 30 சதவிகிதமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.உடல்நல மற்றும் ஊட்டச்சத்து முன்னேற்றங்கள், மேம்படுத்தப்பட்டுள்ள சுகாதாரம், அதிகரித்துள்ள பொருளாதார செழிப்பு போன்றவையே இந்த நீட்டிக்கப்படும் வாழ்க்கை முறைக்குக் காரணங்களாக இருப்பது மகிழ்வை அளிக்கும் விஷயம் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.இதுதவிர பிறப்பு விகிதம் குறைந்து வருவதும் வயதானவர்களையே அதிகம் பார்ப்பதற்கான ஒரு காரணமாகவும் இவர்களால் முன்வைக்கப்படுகின்றது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி