இன்சியான்:-ஆசிய விளையாட்டு போட்டி தென்கொரியாவில் உள்ள இன்சியான் நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று தடகள போட்டியில் ஆண்களுக்கான வட்டு எறிதல் போட்டி நடைபெற்றது.இதில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த 14 வீரர்கள் கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் வீரர் விகாஸ் கவுடா கலந்து கொண்டார். ஒவ்வொரு வீரர்களும் 6 முறை வட்டை எறிந்தனர்.
இதில் ஈரான் வீரர் ஹதாதி எசான் அதிகபட்சமாக 65.11 மீட்டர் தூரத்திற்கு வட்டை எறிந்து தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.இந்திய வீரர் விகாஸ் 62.58 மீட்டர் தூரத்திற்கு வட்டை எறிந்து வெள்ளி பதக்கம் வென்றார். கத்தார் வீரர் தீப் அகமத் முகமது 61.25 மீட்டர் தூரம் வீசி வெண்கலம் பதக்கம் பெற்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி