செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் உத்தரப்பிரதேசத்தில் பயணிகள் ரெயில்கள் மோதல்!…. 6 பேர் பலி, 40 பேர் காயம்…

உத்தரப்பிரதேசத்தில் பயணிகள் ரெயில்கள் மோதல்!…. 6 பேர் பலி, 40 பேர் காயம்…

உத்தரப்பிரதேசத்தில் பயணிகள் ரெயில்கள் மோதல்!…. 6 பேர் பலி, 40 பேர் காயம்… post thumbnail image
புதுடெல்லி:-உத்தரப்பிரதேச மாநிலத்தில் பயணிகள் ரெயில்கள் விபத்துக்குள்ளானதில் ஆறு பேர் பலியானதாகவும், 40 பேர் காயமடைந்துள்ளதாகவும் ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் உள்ள கோரக்பூர் நகரில் நேற்றிரவு 10:45 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

ரெயிலின் வழித்தடத்தை மாற்றுகையில் இவ்விபத்து நேரிட்டதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். அப்போது இரண்டு ரெயில் பெட்டிகள் தடம் புரண்டதாகவும் அதிகாரிகள் கூறினர். காயமடைந்த அனைவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து காரணமாக வாரணாசி-கோரக்பூர் இடையேயான ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு தலா 50000 ரூபாயும், படுகாயமடைந்தவர்களுக்கு தலா 25000 ரூபாயும் வழங்குவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இவ்விபத்து தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள அவசர தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. லக்னோ-0522223042, கோரக்பூர்-05512203265, சாப்ரா-09771443941 ஆகிய அவரச தொலைபேசி எண்களில் மக்கள் தொடர்பு கொண்டு விவரம் கேட்டுக்கொள்ளலாம்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி