செய்திகள்,திரையுலகம் ‘லிங்கா’வில் ஒரு பாடலில் நடிகை திரிஷா!…

‘லிங்கா’வில் ஒரு பாடலில் நடிகை திரிஷா!…

‘லிங்கா’வில் ஒரு பாடலில் நடிகை திரிஷா!… post thumbnail image
சென்னை:-தமிழில் உள்ள எந்த ஹீரோயினைக் கேட்டாலும் அவர்களுடைய ஆசையாக ரஜினிகாந்துடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்று சொல்வார்கள்.திரையுலகில் பத்து வருடங்களுக்கும் மேலாக இருந்து வரும் திரிஷாவிற்கு மட்டும் அந்த ஆசை நிறைவேறாமலே இருக்கிறது.இதனிடையே ‘லிங்கா’ படத்தில் ஒரு பாடலுக்கு திரிஷா நடனமாட உள்ளார் என்ற செய்தி வேகமாகப் பரவி வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் ஒரு பாடலுக்கு நடனமாட திரிஷாவை அழைத்தார்களாம்.

ஆனால், ரஜினியுடன் ஜோடியாக மட்டுமே நடிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு வரும் திரிஷா அந்த வாய்ப்பை மறுத்துவிட்டார் என்றும் சொல்கிறார்கள். இருந்தாலும் திரிஷா அப்படி நடிப்பதில் தவறில்லை என்றும் சிலர் கருதுகிறார்கள். ஏனென்றால் ரஜினியுடன் ஜோடியாக நடித்த நயன்தாரா கூட அதன் பின் ‘குசேலன்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருக்கிறார் என்கிறார்கள்.சிறிய படங்களில் அப்படி ஒரு பாடலுக்கு நடமாடினால்தான் கௌரவக் குறைச்சலாக இருக்கும்.

ஆனால், ரஜினிகாந்த் போன்ற உச்ச நட்சத்திரத்தின் படங்களில் நடிப்பது சம்பந்தப்பட்ட நடிகைகளுக்கு கௌரவத்தைத்தான் கொடுக்கும் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். இப்போது முன்னணி நடிகைகள் பலரும் ஒரு பாடலுக்கு நடனமாடுவதை ஒரு ஃபேஷனாகவே மாற்றிவிட்ட நிலையில், அதெல்லாம் தற்போது பெரிய விஷயமாகவே பார்க்கப்படுவதில்லை என்கிறார்கள். அதனால், திரிஷா விரைவில் அதற்கு சம்மதம் தெரிவிக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி