அவரது தாக்குதலை ஜினா பார்க் சமாளிக்க முடியாமல் தடுமாறியதை அனைவரும் பார்த்துக்கொண்டுதான் இருந்தனர். ஆனால், இறுதியில் தென்கொரிய வீராங்கனை வெற்றி பெற்றதாக நடுவர்கள் அறிவித்தனர். இதனால் அவருக்கு வெண்கலப் பதக்கமே கிடைத்தது.இதனால் வேதனையடைந்த சரிதா தேவி கண்ணீர் விட்டு அழுதார். இந்த பாரபட்சமாக தீர்ப்பை சரிதாவின் கணவர் கண்டித்தார். நடுவரின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடும் செய்யப்பட்டது. அதையும் சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தின் தொழில்நுட்ப கமிட்டி நிராகரித்து விட்டது.
இந்நிலையில் இறுதிப்போட்டி முடிந்து இன்று பதக்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அழுதபடியே மேடை ஏறிய சரிதா தேவி, அவருக்கு வழங்கப்பட்ட வெண்கலப் பதக்கத்தை அணிந்துக் கொள்ள மறுத்துவிட்டார். இதனால், அதிகாரிகளும், பார்வையாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். சரிதாவுக்கு வழங்கப்பட வேண்டிய வெண்கலப் பதக்கம் தற்போது போட்டி அமைப்பாளர்களிடமே உள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி