இதுவரை எந்த படத்திலும் பின்னணி பாடியதில்லை அஜீத். அதனால் விஜய் பாடுவதை அவர் ரொமபவே ரசித்து வருகிறார். ஆரம்பத்தில் இருந்தே விஜய் பாடல்களை விரும்பிக்கேட்டு வரும் அஜீத், தலைவா படத்தில் விஜய் பாடிய வாங்கண்ணா வணக்கங்ண்ணா பாடலையும், தற்போது கத்தி படத்துக்காக விஜய் பாடியுள்ள செல்பிபுள்ள பாடலையும் கேட்டு விஜய்யின் குரலில் இளைஞர்களை சுண்டியிழுக்கு வசீகரம் உள்ளது என்று கூறியுள்ளாராம்.
ஏற்கனவே வாங்கண்ணா வணக்கங்ண்ணா பாடலை கேட்டபோது இந்த பாட்டு கண்டிப்பாக ஹிட்டாகும் என்று சொன்ன அஜீத், இப்போது செல்பிபுள்ள பாடலைக்கேட்டும் இதுவும் ஹிட்டாகும் என்று கூறினாராம். அதையடுத்து இந்த பாடலும் ஹிட்டாகி விட்டதால் தலயின் வாய் முகூர்த்தம் பலித்து விட்டது என்கிறார்கள் கத்தி யூனிட்டினர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி