சென்னை:-பகத் பாசில் நடித்த ‘அன்னயும் ரசூலும்’ படத்தின் மூலம் மலையாள திரையுலகிற்கு அறிமுகமானவர் ஆண்ட்ரியா. இந்நிலையில் பேட்டி ஒன்றில் தான் ஆண்ட்ரியாவை காதலிப்பதாக அப்படத்தின் நாயகன் பகத் பாசில் குண்டை தூக்கிப் போட்டார். இது அண்ட்ரியாவுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்பத்தியது. இதனால் தொடர்ந்து மலையாள படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
ஆனாலும் மலையாள திரையுலகம் ஆண்ட்ரியாவை விடுவதாக இல்லை. லண்டன் பிரிட்ஜ்’என்ற படத்தில் பிருத்விராஜூடன் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்றார். இந்தப் படம்கூட கடந்த பிப்ரவரியில் தான் வெளியானது. தற்போது அதை தொடர்ந்து மேலும் ஒரு மலையாள படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் ஆண்ட்ரியா. அதுவும் மம்முட்டிக்கு ஜோடியாக ஃபயர்மேன் படத்தில் நடிக்கவிருக்கிறார்.படத்தை இயக்குபவர் திபு கருணாகரன். இப்படத்தில் மம்முட்டி தீயணைப்பு துறை அதிகாரியாக நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி