செய்திகள்,விளையாட்டு சாம்பியன்ஸ் லீக்: கேப் கோப்ராஸை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!…

சாம்பியன்ஸ் லீக்: கேப் கோப்ராஸை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!…

சாம்பியன்ஸ் லீக்: கேப் கோப்ராஸை வீழ்த்தியது கிங்ஸ் லெவன் பஞ்சாப்!… post thumbnail image
சண்டிகர்:-இந்தியாவில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் டி.20. கிரிக்கெட் போட்டியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கேப் கோப்ராஸ் அணியும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.டாஸ் வென்ற பஞ்சாப் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனால் கோப்ராஸ் அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அந்த அணியின் லெவியும், அம்லாவும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடி ஆட்டம் ஆடி ரன்களை குவித்தனர். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 60 ரன்களை குவித்தது. 7வது ஓவரின் போது 22 பந்துகளை மட்டுமே சந்தித்து 40 ரன்கள் குவித்த அம்லா அவுட்டாக 3வது விக்கெட்டுக்கு ரமேலா களமிறங்கினார்.

ஆனால் அவர் 12 ரன்னுக்கு தனது விக்கெட்டை பறிகொடுக்க 4வது விக்கெட்டுக்கு வான் சைல் களமிறங்கினார். அவரும் பஞ்சாப் அணியும் பந்துவீச்சை சமாளிக்க திணறினார். இந்த நேரத்தில் நன்றாக விளையாடி வந்த லெவியும் 42 ரன்னுக்கு அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களுக்கு நடையை கட்ட அந்த அணி 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 135 ரன் மட்டுமே எடுத்தது. பின்னர் வெற்றிக்கு 136 ரன்கள் என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக வழக்கம் போல் சேவாக்கும், வோராவும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக ஆடி ரன்களை குவித்தனர். எனினும் 5வது ஓவரில் 23 ரன்னுக்கு வோரா தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனையடுத்து 3வது விக்கெட்டுக்கு சாகா களமிறங்கினார். அவரும் தனது ஆட்டத்தில் பட்டையை கிளப்பினார். சிறிது நேரத்தில் 23 ரன் எடுத்த சேவக் பீட்டர்சன் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அதன் பின் மேக்ஸ்வெல் சாகாவுடன் ஜோடி சேர்ந்தார்.

மேக்ஸ்வெல்லும் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 19 பந்துகளை சந்தித்து 23 ரன்களை எடுத்த மேக்ஸ்வெல் அவுட்டாக 5வது விக்கெட்டுக்கு மில்லர் களமிறங்கினார். அவரும் சாகாவும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர். சாகா 42 ரன்களுடனும், மில்லர் 16 ரன்னுடனும் களத்தில் இருந்த நிலையில் 18.1 ஓவரிலேயே வெற்றி இலக்கை எட்டியது பஞ்சாப் அணி. ஆட்டநாயகனாக பஞ்சாப் அணியின் படேல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி