சென்னை:-‘ராஜா ராணி’ வெற்றிக்குப் பிறகு இயக்குனர் அட்லி அடுத்து யாருடன் படம் பண்ணப் போகிறார் என்ற கேள்விக்கு கிடைத்த பதில்தான் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.அட்லி தனது அடுத்த படம் விஜய்யுடன் என்பதுதான் இப்போதைய லேட்டஸ்ட் செய்தி.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘கத்தி’ படத்தைத் தொடர்ந்து சிம்புதேவன் இயக்கத்தில் இதுவரை இல்லாத வித்தியாச கதைக்களத்தில் விஜய் நடிக்க உள்ளார். அந்த படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். மேலும் இந்த ’விஜய் 59’ படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பார் எனவும், ஜி.வி பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைப்பார் எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி