செய்திகள்,திரையுலகம் ‘லிங்கா’ படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு ஆரம்பம்!…

‘லிங்கா’ படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு ஆரம்பம்!…

‘லிங்கா’ படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு ஆரம்பம்!… post thumbnail image
சென்னை:-இந்த ஆண்டில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் படமாக இருந்து வரும் படங்களில் ‘லிங்கா‘வும் ஒன்று. கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில், ஏ.ஆர்.ரகுமான் இசையைமப்பில் படம் உருவாகி வருவதால் நிச்சயம் அனைத்து ரசிகர்களையும் படம் திருப்திப்படுத்திவிடும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

கடந்த சில மாதங்களாகவே இடைவிடாமல் படப்பிடிப்பு நடந்து கொண்டு வந்தது. கடந்த வாரம் ‘ஐ’ இசை வெளியீட்டில் ரஜினிகாந்த் கலந்து கொண்டதால் சில நாட்கள் படப்பிடிப்பை நிறுத்தி வைத்தார்கள். அதன் பின் அவர் மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இரண்டு நாட்களுக்கு முன் ‘லிங்கா’ படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு ஆரம்பமானது.

ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டரான லீ விடேகர் தலைமையில் கிளைமாக்ஸ் சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. டை ஹார்ட், ஃபாஸ்ட் பைவ் உள்ளிட்ட பல படங்களுக்கு ஸ்டண்ட் அமைத்துக் கொடுத்தவர்தான் லீ விடேகர். அதனால் ‘லிங்கா’ படத்தின் சண்டைக் காட்சிகள் ரஜினிகாந்த் ஸ்டைலுடன் இன்னும் பலமாக இருக்கும்படி படமாக்கப்பட்டு வருகிறது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி