அவர்களைப் போன்ற ஒரு பிரபலமான நிறுவனம் ஐ படத்தை உலகம் முழுவதும் வெளியிட்டால் 5000 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலிக்கும் தகுதி ஐ படத்திற்கு உண்டு என்கிறார்.இந்தியத் திரையுலகம் ஐ படத்திற்கு முன், ஐ படத்திற்குப் பின் என பிரிக்கப்படும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார். இந்தப் படத்திற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் உழைத்திருக்கிறார்கள். உலகமே இந்திய சினிமாவைத் திரும்பிப் பார்க்க வைக்கும், இயக்குனர் ஷங்கரை இந்தியாவின் ஜேம்ஸ் கேமரூன் என்று சொல்வார்கள். ஒவ்வொருவரும் குடும்பத்துடன் படத்தைப் பார்த்து ரசிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார்கள்.
இப்போதே அறுபது சதவீதத்திற்கும் மேலானவர்களை இந்தப் படம் சென்றடைந்துவிட்டது. அவர்கள் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார்கள், ஆந்திராவிலும் இதே நிலைமைதான்.
ஐ படத்தை உலகில் உள்ள மூலை முடுக்குகளுக்கெல்லாம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்று முயற்சி எடுத்து வருகிறோம், அதற்கான வலிமை படத்திற்கு உண்டு. ஷங்கர் மற்றும் அவரது குழுவினரின் இந்த முயற்சிகளுக்கு நாங்கள் பெருமைப்படுகிறோம், என்று படத்தின் தயாரிப்பாளரான ஆஸ்கர் ரவிச்சந்திரன் கூறியிருக்கிறார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி