பின்னர் சில டிவி நிகழ்ச்சிகளை நடத்தி வந்தவர், அன்னா ஹசாரேவின் லோக்பால் பிரசாரத்திலும் முக்கிய பங்கு வகித்தார். கிரண் பேடியாக பிரியங்கா நடிக்க உள்ளதை அவரது செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். மேலும் இது பற்றிய பேச்சு வெகு நாட்களுக்கு முன்னரே துவங்கி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இருப்பினும், கிரண் பேடி வேடத்தில் நடிப்பதற்கு பிரியங்காவிற்கு சம்பளமாக ரூ.10 கோடி தருவதாக கூறப்பட்டதாகவும், அந்த கதை தனக்கு பிடித்திருந்தால் மட்டுமே அதில் நடிப்பது பற்றி தான் முடிவு செய்வதாகவும் பிரியங்கா கூறி விட்டதாகவும் பாலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
லக் மற்றும் கால் படங்களை இயக்கிய சோஷம் ஷா தான் இந்த படத்தையும் இயக்க உள்ளாராம். இந்த படம் பற்றி கேட்க கிரண் பேடியை அனுகிய போது, முதலில் ஆச்சர்யப்பட்ட அவர் அது பற்றி தனக்கு எதுவும் தெரியாது என கூறி விட்டார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி