சென்னை:-நடிகை சுருதிஹாசன் டெலிவிஷன் பேட்டியொன்றில் விவாகரத்து செய்துகொண்ட தனது தந்தை கமல்ஹாசன், தாய் சரிகா பற்றி மனம் திறந்து பேசினார். அவர் கூறும்போது, ஒரு தம்பதியாக என் தாயும் தந்தையும் அழகான ஜோடியாக இருந்ததை நான் பார்த்து இருக்கிறேன். ஒருவருக்கொருவர் நிறைய அன்பு செலுத்தினார்கள். சந்தோஷமான குடும்பமாக இருந்தோம்.
தாய்–தந்தை போலவே நானும் சமூக வரையறைகளுக்குள் சிக்க விரும்பவில்லை. திருமணத்துக்கு முன்பு குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதற்கு பிறகுதான் திருமணமே செய்து கொள்வேன் என்றார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி