நியூயார்க்:-வரும் 2019-ஆம் ஆண்டிற்குள் இந்தியா உலகிலேயே அதிக அளவில் ஸ்மார்ட்போன் விற்பனையாகும் சந்தையாக உருவாகும் என ஆய்வில் தெரிய வந்துள்ளது. பாஸ்டனை சேர்ந்த குளோபல் மார்க்கெட் ரிசர்ச் ஸ்மார்போன்கள் விற்பனையில் ஏற்பட்ட திடீர் தொய்வு குறித்து ஆராய்ச்சி செய்தது. இந்த ஆய்வின் முடிவு பின்வருமாறு:-உலகம் முழுவதும் ஸ்மார்ட்போன் விற்பனை சற்று வேகம் குறைந்துள்ள நிலையில், அடுத்த ஆண்டு சுமார் 13 சதவீதம் வரை விற்பனை அதிகரிக்கும்.
ஸ்மார்ட்போன் விற்பனையை பொறுத்தவரை 2014-ஆம் ஆண்டில் சீனாவும், அமெரிக்காவும் உலக அளவில் தொடர்ந்து முன்னிலையில் உள்ளன. உலகம் முழுவதும் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களில் 43 சதவீதம் இங்குதான் விற்கப்படுகிறது. எனினும், லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆசிய பசிபிக் நாடுகளிலேயே அதிக அளவில் ஸ்மாரட்போன்களுக்கு வரவேற்பு உள்ளது. வரும் 2019-ஆம் ஆண்டிற்குள் அமெரிக்கா, சீனாவை விட உலகிலேயே ஸ்மார்ட்போன்கள் அதிகம் விற்பனையாகும் மிகப்பெரிய சந்தையாக இந்தியா உருவெடுக்கும். இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி