பெய்ஜிங்:-சீன மக்கள் விடுதலை படையினர் பிராந்திய போருக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் மத்திய தலைமையின் முடிவுகளையையும் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று சீன அதிபர் ஜி ஜிங்பிங் தெரிவித்துள்ளார். சீன மக்கள் விடுதலை படையினர் முழுமையான விசுவாசத்தோடும், சீனாவின் கம்யூனிஸ்டு கட்சியின் நம்பிக்கைக்குரியதாகவும் இருக்க வேண்டும்.
மத்திய தலைமையைகத்தின் முடிவுகளை முழுமையாக செயல்படுத்தும் உத்தரவாதத்துடன் இருக்க வேண்டும் என்று மத்திய மிலிட்டரி ஆணையத்தின் தலைவரும் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளருமான ஜீ தெரிவித்துள்ளார். மேற்கண்ட தகவலை அங்கிருந்து வெளியாகும் செய்தி சேனல்கள் தெரிவித்துள்ளன.
சீன மக்கள் விடுதலைப்படையினருடன் இவ்வாறு ஜி பேசியிருப்பது முதல் முறையல்ல. இருப்பினும் இந்திய எல்லைக்கட்டுப்பாடு பகுதியில் சீன ராணுவத்தினர் அடிக்கடி இந்திய எல்லையில் அத்துமீறுவதால் இவரது தற்போதைய அறிக்கை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி