சென்னை:-உதயநிதி ஸ்டாலின், நயன்தாரா நடிக்கும் நண்பேன்டா என்ற படத்தின் படப்பிடிப்பு விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள பூந்துறையில் நடந்து வருகிறது. உதயநிதியும், காமெடி நடிகர் சந்தானமும் சிறையில் இருந்து தப்பி செல்வது போன்ற காட்சியை படமாக்க. ஆர்ட் டைரக்டரின் பணியாட்கள் கடந்த சில நாட்களாக ஷெட் அமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த பணிக்காக ராட்சத கிரேன் ஒன்று பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. வேலை நடந்து கொண்டிருந்தபோது திடீரென கிரேன் சரிந்து தொழிலாளர்கள் மீது விழுந்தது. இதில் கோடம்பாக்கத்தைச் சேர்ந்த அருணகிரி, ரமேஷ், சதீஷ், மூர்த்தி ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி