இதை தொடர்ந்து வளசரவாக்கம் போலீஸ் நிலையம் மற்றும் தி.நகர் பகுதியில் உள்ள உயர் போலீஸ் அதிகாரிகளை நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டனர். இதனால் பரபரப்பு அதிகமானது. நடிகை கடத்தலா? அப்படி எந்த தகவலும் இல்லையே? என்பது போன்ற பதிலே அதிகாரிகளிடமிருந்து வந்தது. பின்னர் அதிகாரிகள் மட்டத்தில் இருந்து இதுபற்றி வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் தொடர்பு கொண்டு விசாரித்தனர். இதன் பின்னரே நடந்தது என்ன? என்பது பற்றி போலீசார் விளக்கினர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:–கடத்தப்பட்டதாக கூறப்படும் நடிகையின் தாய் கற்பகம், சில நாட்களுக்கு முன்னர் வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் வந்து புகார் செய்தார். அதில், தனது மகள் நடிகை அபினிதாவை காணவில்லை என்று கூறியிருந்தார். இதுபற்றி நாங்கள் விசாரணை நடத்தி அபினிதாவை தேடினோம். அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர் தனது காதலனுடன் ஓடியிருப்பது தெரியவந்தது.
அபினிதாவின் தாய் புகார் கொடுத்து 2 நாட்கள் கழித்த பின்னர், தனது காதலன் மகேசுடன் அவராகவே போலீஸ் நிலையத்துக்கு வந்துவிட்டார்.என்னை காணவில்லை என்று எனது தாய் புகார் செய்திருப்பதாக அறிந்தேன். நான் எனது காதலனை திருமணம் செய்து கொண்டு பட்டுக்கோட்டையில் இருக்கிறேன் என்று அபினிதா எழுதிக் கொடுத்துவிட்டு சென்றுவிட்டார்.அவரை யாரும் கடத்த வில்லை. அது போன்ற ஒரு தகவலை யாரோ பரப்பி விட்டுள்ளனர். இவ்வாறு போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.இதன் பின்னரே நடிகை கடத்தப்பட்டதாக பரவிய பரபரப்பு அடங்கியது.இச்சம்பவம் தொடர்பாக அபினிதாவின் தாய் கற்பகம் கூறியதாவது:–அபினிதா நடித்துள்ள கற்பவை கற்றபின், மாமன் மச்சான் போன்ற படங்கள் வெளிவந்துவிட்டன. மீனாட்சி காதலன் இளங்கோவன், 6 சக்கர குதிர, ஒரு தோழன், ஒரு தோழி உள்ளிட்ட படங்களிலும் அவர் நடித்துள்ளார். விழா படத்தில் 2–வது கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
கற்பவை கற்றபின் படத்தில் நடித்தபோதே அப்படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றிய மகேஸ் என்பவரை காதலிப்பதாக அபினிதா கூறினாள். ஒரு படத்தை இயக்கிய பின்னர் திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறினோம்.ஆனால் அபினிதா திடீரென காணாமல் போய் விட்டாள்.இதுபற்றி வளசரவாக்கம் போலீசில் புகார் செய்தேன். அதில் அபினிதாவின் காதல் விவகாரம் பற்றியும் கூறியிருந்தேன். இருந்தாலும் காதலன் மகேசுடன்தான் அபினிதா சென்றிருக்கிறாளா? என்பதை கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன்.போலீசார் விசாரித்து எனது மகள் மகேசுடன் இருப்பதை உறுதி செய்து விட்டனர். 2 பேருமே வளசரவாக்கம் போலீஸ் நிலையத்துக்கு வந்து எழுதிக் கொடுத்து விட்டு சென்று விட்டனர்.
நானும் புகார் மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டேன்.திருமணத்துக்கு பின்னரும் அவள் நடிக்கப்போவதாக கூறியிருந்தாள். எனவே புதிய படங்களில் அபினிதா நடிப்பாள் என்று எதிர்பார்க்கிறேன்.
நானும் சினிமா உலகில் தான் இருக்கிறேன். ஒரு நடிகையின் வாக்கு மூலம், பதிலடி போன்ற படங்களில் பாடல் எழுதியுள்ளேன். களவாணி படத்தில் சிறிய வேடத்தில் வேடத்தில் நடித்துள்ளேன். ‘‘அண்டாவை காணோம்’’ என்ற புதிய படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளேன்.சினிமாவை பற்றி ஓரளவுக்கு தெரிந்து வைத்திருந்ததால், மகள் காதலிக்க தொடங்கியவுடன் கால்ஷீட் பிரச்சினை எதுவும் வராமல் நானே பார்த்துக் கொண்டேன். புதிய படங்களையும் தவிர்த்து விட்டோம்.இவ்வாறு அபினிதாவின் தாய் கற்பகம் கூறினார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி