செய்திகள்,திரையுலகம் டுவிட்டரில் விஜய் பட ஹீரோயினுக்கு 7 மில்லியன் ரசிகர்கள்!…

டுவிட்டரில் விஜய் பட ஹீரோயினுக்கு 7 மில்லியன் ரசிகர்கள்!…

டுவிட்டரில் விஜய் பட ஹீரோயினுக்கு 7 மில்லியன் ரசிகர்கள்!… post thumbnail image
மும்பை:-பாலிவுட் முன்னணி நடிகையான பிரியங்கா சோப்ராவிற்கு டுவிட்டரில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இதனை பயன்படுத்தி அவர் தனது ரசிகர்களுடன் இன்டராக்ட் செய்து வருகிறாராம். தனது ரசிகர்கள், தன்னை பற்றி டுவிட் செய்யும் கருத்துக்களுக்கு உடனே பதில் டுவிட் செய்கிறாராம். அதுமட்டுமின்றி ஒரு குறிப்பிட்டு கால இடைவெளியில் தனது லேட்டஸ்ட் போட்டோக்களையும் அவர் அப்லோட் செய்து வருகிறாராம்.

இதனால் அவரது டுவிட்டர் ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதாம். தற்போது டுவிட்டரில் அவருக்கு 7 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்களாம். இந்த தகவலையும் அவரே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளாரார்.டுவிட்டரில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, அனைவருக்கும் நன்றி. எனது ரசிகர்கள் குடும்பம் விரிவடைந்து வருகிறது. உங்களது அன்பு தான் என்னை மேலும் முன்னேற வைக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி