இந்த தொழிற்சாலைகளில் 100 மில்லியன் கிலோவுக்கு மேல் தேயிலை தயாரிக்கப்படுகிறது. தேயிலை மூலம் இந்தியாவிற்கு அதிக அளவில் பொருளாதாரம் கிடைக்கிறது. அதைப்போல் உடல் நலத்திற்கு நன்மை தரும் தேநீர் பானத்தை அருந்துபவர் எண்ணிக்கை வருடத்திற்கு 3 சதவீதம் அதிகரித்து வருகிறது என்று இந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், இந்தியாவில் 1200 மில்லியன் கிலோ தேயிலை தயாரிக்கப்படுகிறது.
இதில் 900 மில்லியன் கிலோ நம் நாட்டில் பயன்பாட்டிற்கு செல்கிறது. தேயிலை ஒரு இயற்கை பானம். தேயிலை தயாரிப்பில் வெளிநாட்டு பொருட்கள் ஏதும் சேர்க்கப்படவில்லை. மற்ற பானங்களை விட தேநீர் உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தை வழங்கக்கூடியது. எனவே, தேநீரை தேசிய பானமாக அறிவிக்க வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி