இந்த தகவலை ‘மாவென்’ திட்ட மேலாளர் டேவிட் மிச்செல் தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்தில் பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் மற்றும் கார்பன்டை ஆக்சைடு போன்றவை இருந்தன. தற்போது, அங்கு அவை இல்லை. கடும் குளிர் நிலவுகிறது. அங்கு மைனஸ் 0 டிகிரி ஆக தட்ப வெப்ப நிலை உள்ளது. இது போன்ற நிலை ஏற்பட்டது ஏன் என்பதற்கு ‘மாவென்’ விண்கல ஆராய்ச்சி மூலம் விடை கிடைக்கும் என விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
2030ம் ஆண்டில் அங்கு மனிதன் குடியேறும் திட்டமும் உள்ளது. அதற்கான சாத்திய கூறுகள் உள்ளனவா? என்றும் ஆராய்ச்சி மேற்கொள்ளப்படும் என்றும் தெரிகிறது. மேலும் ஏற்கனவே இருந்த தண்ணீர் மற்றும் கார்பன்டை ஆக்சைடு அங்கு மாயமானது எப்படி பருவநிலை மாற்றம் ஏற்பட காரணம் என்ன? என்றும் தெரிய வரும். தற்போது சுற்றுப் பாதையை அடைந்துள்ள ‘மாவென்’ விண்கலம் இன்னும் 6 வாரத்தில் செவ்வாய் கிரகத்தை அடைந்து தனது ஆராய்ச்சியை தொடங்கும். அங்கு ஒரு வருடம் முகாமிட்டு தனது பரிசோதனையை தொடங்கும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி