செய்திகள்,திரையுலகம் 2 நாட்களில் 10 லட்சம் பேர் பார்த்த ‘கத்தி’ படத்தின் டீசர்!…

2 நாட்களில் 10 லட்சம் பேர் பார்த்த ‘கத்தி’ படத்தின் டீசர்!…

2 நாட்களில் 10 லட்சம் பேர் பார்த்த ‘கத்தி’ படத்தின் டீசர்!… post thumbnail image
சென்னை:-ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவரவுள்ள படம் ‘கத்தி’. இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சதீஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஜார்ஜ் வில்லியம்ஸ் இப்படத்திற்கு ஒளிப்பதிவை செய்திருக்கிறார். அனிருத் இசையமைத்திருக்கிறார்.

பல சர்ச்சைகளுக்கும், எதிர்ப்புகளுக்கும் நடுவே இப்படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் விஜய், சமந்தா, இயக்குனர் முருகதாஸ், அனிருத் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர். இவ்விழாவில் அனிருத் மற்றும் ஹிப்ஹாப் தமிழா ஆதி ஆகியோர் மேடையில் பாட்டு பாடி நடனமாடினார்கள்.

அனிருத் இசையில் அமைந்துள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தின் டீசரை யூடியூப்பில் வெளியிட்ட இரண்டு நாட்களில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் பார்த்து ரசித்து வருகிறார்கள்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி