செய்திகள்,திரையுலகம் நவம்பர் 9ம் தேதி இயக்குனர் அட்லி திருமணம்!…

நவம்பர் 9ம் தேதி இயக்குனர் அட்லி திருமணம்!…

நவம்பர் 9ம் தேதி இயக்குனர் அட்லி திருமணம்!… post thumbnail image
சென்னை:-‘ராஜா ராணி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இவர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வசூலிலும் சாதனைப் படைத்தது. இதைத் தொடர்ந்து முன்னணி தயாரிப்பாளர்கள் தங்களுடைய படங்களை இயக்க வாய்ப்புகள் கேட்டு இவரிடம் வந்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில் அட்லியும் சின்னத்திரை நடிகை பிரியாவும் காதலித்து வந்தனர். இவர்களுடைய காதலுக்கு இருவர் வீட்டிலும் சம்மதம் தெரிவித்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஆர்யா மற்றும் நயன்தாரா பங்கேற்று வாழ்த்தினார்கள். இவர்கள் திருமணம் வருகிற நவம்பர் மாதம் 9ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில் நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி