செய்திகள்,திரையுலகம்,விளையாட்டு ‘கோச்சடையான்’ சாதனையை முறியடித்த ‘ஐ’!…

‘கோச்சடையான்’ சாதனையை முறியடித்த ‘ஐ’!…

‘கோச்சடையான்’ சாதனையை முறியடித்த ‘ஐ’!… post thumbnail image
சென்னை:-தற்போது ஒரு படத்தின் டீஸருக்கும் டிரைலருக்கும் கிடைக்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கையை வைத்தும் திரையுலகினர் அவர்களது படத்தை விளம்பரப்படுத்துவதும் வாடிக்கையாகிவிட்டது.கடந்த 5 நாட்களுக்கு முன் யு டியூப் இணையதளத்தில் ‘ஐ’ டீஸர் வெளியிடப்பட்டது. அதற்குள்ளாக 49 லட்சம் பேர் அந்த டீஸரைப் பார்த்து ரசித்துள்ளனர்.

கடந்த ஒரு ஆண்டில் ‘கோச்சடையான்’ டீஸருக்குக் கிடைத்த பார்வையாளர்களின் எண்ணிக்கையை ‘ஐ’ பட டீஸர் ஐந்தே நாட்களில் முறியடித்து புதிய சாதனையை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 9ம் தேதி வெளியிடப்பட்ட ‘கோச்சடையான்’ பட டீஸரை மொத்தமாக இதுவரை 48 லட்சம் பேர் கண்டு களித்துள்ளனர். ஆனால், அந்த எண்ணிக்கை வெறும் ஐந்தே நாட்களில் ‘ஐ’ படம் கடந்து விட்டது. இது இந்திய அளவிலும் ஒரு மிகப் பெரிய சாதனையாகும்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி