சென்னை:-மகேஷ் பாபு, தமன்னா நடித்து வெளிவந்த ‘ஆகடு’ படத்தில் ஸ்ருதிஹாசன் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். படம் முழுவதும் தமன்னா அவருடைய அழகான தோற்றத்தாலும், கிளாமரான ஆடையாலும் வந்து அசத்தினாலும், ஸ்ருதிஹாசன் ஒரே ஒரு பாடலில் தமன்னாவை ஓவர் டேக் செய்துவிட்டார் என்கிறார்கள்.
தமன்னா படம் முழுவதும் கஷ்டப்பட்டு நடித்து பெயர் வாங்கினாலும், ஒரே பாடலில் மொத்த ரசிகர்களையும் ஸ்ருதிஹாசன் ஈர்த்திருப்பது எவ்வளவு பெரிய விஷயம் என்று திரையுலகினரே பாராட்டுகிறார்களாம். இப்படி நடக்கும் என்று தெரிந்ததுதான் தமன்னா, இப்படத்தின் படப்பிடிப்பில் இயக்குனருடனும், நாயகன் மகேஷ் பாபுவுடனும் சண்டை போட்டாரோ என்கிறார்கள் விஷயமறிந்தவர்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி