செய்திகள்,முதன்மை செய்திகள்,விளையாட்டு இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அபராதம்!…

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அபராதம்!…

இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு அபராதம்!… post thumbnail image
இன்சியான்:-ஆசிய விளையாட்டில் இந்தியா மொத்தம் உள்ள 36 போட்டியில் 28 விளையாட்டுகளில் பங்கேற்கிறது.தடகளம், வில்வித்தை, பேட்மின்டன், நீச்சல், கூடைப்பந்து, குத்துச்சண்டை, துடுப்பு படகு, பாய்மரபடகு, படகு போட்டி, சைக்கிளிங், குதிரையேற்றம், ஆக்கி, கால்பந்து, ஜிம்னாஸ்டிக், கோல்ப், ஹேண்ட்பால், ஜூடோ, கபடி, செபக்தக்ரா, துப்பாக்கி சுடுதல், ஸ்குவாஷ், டேபிள் டென்னிஸ், டேக் வாண்டோ, கைப்பந்து, டென்னிஸ், பளுதூக்குதல், மல்யுத்தம், உசூ ஆகிய விளையாட்டுகளில் 516 இந்திய வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

பீச் வாலிபால், 7 பேர் பங்கேற்கும் ரக்பி ஆகிய 2 விளையாட்டுகளில் பங்கேற்பதாக இந்திய அணி முதலில் அறிவித்து இருந்தது. கடைசி நேரத்தில் இந்த 2 போட்டியில் இருந்தும் இந்திய அணி விலகியது.
இதற்காக இந்திய ஒலிம்பிக் சங்கம் மீது ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் நடவடிக்கை எடுத்து உள்ளது.

ஒ.சி.ஏ.யின் பொதுக் குழுவில் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கு எச்சரிக்கை விடப்பட்டு ரூ.6 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு அணிகளை அனுப்புவதில் இந்திய ஒலிம்பிக் சங்கத்துக்கும், மத்திய அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.பதக்க வாய்ப்பு இல்லாத விளையாட்டுகளில் அணியை அனுப்ப வேண்டாம் என்று மத்திய விளையாட்டு அமைச்சகம் திடீர் தடை போட்டது. இதனால் பீச் வாலிபால், ரக்பி போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் விலகியது. இதன் காரணமாகவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி