சென்னை:-அஜீத் தற்போது கௌதம் மேனன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக திரிஷா மற்றும் அனுஷ்கா நடித்து வருகிறார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து வருகிறார். டான் மெகதூர் ஒளிப்பதிவை செய்து வருகிறார். விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிக்கவுள்ளனர். பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இப்படத்தை அடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் அஜீத். இப்படத்தை லிங்குசாமி தயாரிக்கவுள்ளார். வீரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சிறுத்தை சிவாவுடன் மீண்டும் இணைகிறார் அஜீத். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த வீரம் படம் பட்டிதொட்டி எங்கு வெற்றிகரமாக ஓடி வசூலிலும் சாதனை படைத்தது. அந்த வரிசையில் இப்படமும் அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. படத்தில் நடிக்கும், நடிகைகள் தேர்வுகள் நடந்து வருகிறது. கூடிய விரைவில் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிடவுள்ளனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி