செய்திகள்,பொருளாதாரம்,முதன்மை செய்திகள் நைஜீரியா கட்டிட விபத்தில் பலி 80 ஆக உயர்வு!…

நைஜீரியா கட்டிட விபத்தில் பலி 80 ஆக உயர்வு!…

நைஜீரியா கட்டிட விபத்தில் பலி 80 ஆக உயர்வு!… post thumbnail image
லாகோஸ்:-நைஜீரியாவின் நிதி தலைநகரமான லாகோசில் உள்ள மிகப்பெரிய தேவாலயத்திற்கு சொந்தமான விருந்தினர் மாளிகை சில தினங்களுக்கு முன் இடிந்து விழுந்தது. பிரார்த்தனைக்காக ஏராளமானோர் வருகை தந்த சமயத்தில் கட்டிடம் இடிந்து விழுந்ததால், பலர் இடிபாடுகளில் சிக்கி பலியாகினர். தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று முன்தினம் வரை 70 உடல்கள் மீட்கப்பட்டிருந்தன. நேற்று மாலை மேலும் 10 உடல்கள் மீட்கப்பட்டதையடுத்து, பலி எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 131 பேர் உயிருடன் மீட்கப்பட்டு, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.இறந்தவர்களின் உடல்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று தேசிய அவசரநிலை மேலாண்மை நிறுவனத்தின் அதிகாரி இப்ராகிம் தெரிவித்தார். மேலும், முதல் மூன்று நாட்களுக்கு மீட்பு பணிக்கு தேவாலய நிர்வாகம் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.

இந்த சம்பவத்தையடுத்து அந்த வளாகத்தில் உள்ள பிரதான தேவாலயம் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களின் உறுதித்தன்மை குறித்து பரிசோதனை செய்யும்படி லாகோஸ் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி