சென்னை:-பாராகான் இயக்கத்தில், ஷாரூக்கான், அபிஷேக், போமன் இரானி, சோனு சூட், தீபிகா படுகோனே ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் ஹேப்பி நியூ இயர். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா செப் 15ம் தேதி நடந்தது. விழாவில் ஷாரூக், அபிஷேக், தீபிகா, சோனு சூட், இசையமைப்பாளர்கள் விஷால்-சேகர், பாடலாசிரியர் இர்ஷாத் கமில், பாடகிகள் நீட்டி மோகன், கனிகா கபூர், சுக்விந்தர் சிங், இயக்குநர் பாரா கான் மற்றும் தயாரிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் வேலைகள் நடைபெற்று வரும் வேளயைில் படத்தை தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய உள்ளனர். பொதுவாக இந்தி படங்களுக்கு, அதிலும் ஷாரூக்கானின் படங்களுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நல்ல வரவேற்பு இருப்பதால் ஹேப்பி நியூ இயர் படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் ரிலீஸ் செய்கின்றனர்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி