ஆனால் அவரோ, சினிமாவில் நான் ஆடிய கடைசி நடனம் பிரசாந்துடன் ஆடியதாக இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன் எனறு சொல்லி தொடர்ந்து குத்தாட்டமாட மறுக்கிறாராம். காரணம், பாலிவுட்டில் கதாநாயகியாக சில படங்களில் நடித்த நான் பின்னர் அயிட்டம் பாடலுக்கு நடனமாடியதால், அதையடுத்து எனக்கான கதாநாயகி வாய்ப்புகள் குறைந்துவிட்டன.
அதனால்தான், அதேநிலை தமிழிலும் தொடரக்கூடாது என நினைக்கிறேன் என்று கூறியுள்ள நர்கீஸ்பக்ரி, தொடர்ந்து கதாநாயகியாக நடிக்க மட்டுமே விரும்புகிறாராம். அப்படி தன்னை கதாநாயகியாக நடிக்க வைக்கும் படங்களில் அயிட்டம் பாடல்கள் இருந்தால் துக்கடா டிரஸ் அணிந்து நறுக் ஆட்டம் போடவும் தயாராக உள்ளாராம். என்னை புக் பண்ணினால், ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் போன்று கதாநாயகியும் கிடைப்பாள் கூடவே அயிட்டம் நடிகையும் கிடைப்பாள் என்கிறாராம் நர்கீஸ் பக்ரி.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி