பின்னர், அவர்கள் முன்னிலையில் இரு நாடுகளுக்கிடையே வர்த்தக மேம்பாடு, கலாச்சார பரிமாற்றங்கள், ரெயில்வே துறையில் ஒத்துழைப்பை நீட்டிப்பது உள்ளிட்ட 12 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
இதையடுத்து நிருபர்களிடையே பேசிய பிரதமர் மோடி, சீன அதிபருடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்பாக விளக்கினார். விரைவான வளர்ச்சி மற்றும் சிறந்த உறவுகளுக்கு எல்லையில் அமைதி நிலவ வேண்டியது அவசியம் என வலியுறுத்தியதாகவும், விசா கொள்கை தொடர்பான தனது கவலையை சீன அதிபரிடம் தெரிவித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்தியாவில் அடுத்த ஐந்தாண்டுகளில் சீனா 20 பில்லியன் டாலர் முதலீடு செய்யும் என அதிபர் ஜின்பிங் உறுதி அளித்திருப்பதற்கு நன்றி தெரிவித்த மோடி, இந்தியா-சீனா இடையே அணுசக்தி ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தையும் விரைவில் தொடங்கும் என்றார். மும்பையும் ஷாங்காயும் இரட்டை நகரங்களாக நவீனமயமாக்கப்படும் என்றும் மோடி தெரிவித்தார்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி