இன்ஜியான்:-17–வது ஆசிய விளையாட்டு போட்டி தென்கொரியாவில் உள்ள இன்ஜியான் நகரில் நாளை தொடங்குகிறது. அக்டோபர் 4–ந்தேதி வரை இந்த விளையாட்டு திருவிழா நடைபெறுகிறது.இந்த போட்டியில் இந்தியா, சீனா, ஜப்பான், தென்கொரியா, வட கொரியா, தாய்லாந்து, ஆங்காங், ஈரான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனதைபே உள்பட ஆசிய கண்டத்தில் உள்ள 44 நாடுகள் பங்கேற்கின்றன.
ஒலிம்பிக்கின் 28 விளையாட்டுடன் கிரிக்கெட், பேஸ்பால், டென்பின் பவுலிங், கபடி, கராத்தே, செபக்தக்ரா, ஸ்குவாஷ் உசூ ஆகிய போட்டிகளோடு 36 விளையாட்டுகள் நடபெறுகிறது. 439 பிரிவுகளில் பதக்கம் வழங்கப்படுகிறது.நாளை தொடக்க விழா மட்டும் நடைபெறும். இன்ஜியான் மெயின் ஸ்டேடியத்தில் தொடக்க விழா மற்றும் முக்கிய போட்டிகள் நடைபெறும். கால்பந்து போட்டிகள் மட்டும் கடந்த 14ம் தேதியே தொடங்கிவிட்டது. 20ம் தேதியில் இருந்து போட்டிகள் நடைபெறுகிறது.ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் 515 வீரர்– வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள்.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி