செய்திகள்,தொழில்நுட்பம்,முதன்மை செய்திகள் டூப்ளிகெட் மெமரி கார்டுகளை களையெடுக்க களமிறங்கும் சான்டிஸ்க்!…

டூப்ளிகெட் மெமரி கார்டுகளை களையெடுக்க களமிறங்கும் சான்டிஸ்க்!…

டூப்ளிகெட் மெமரி கார்டுகளை களையெடுக்க களமிறங்கும் சான்டிஸ்க்!… post thumbnail image
மும்பை:-உலக அளவில் பிரபலமான மெமரி கார்டு, பென் டிரைவ் தயாரிக்கும் சான்டிஸ்க் நிறுவனத்திற்கு சந்தைகளில் விற்கும் டூப்ளிகெட் மெமரி கார்டுகள் பெரும் சவாலாக அமைந்துள்ளது.இந்நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் 512 எம்.பி அளவில் இருந்து 512 ஜி.பி வரை 1000 மடங்கு கொள்ளளவை அதிகரித்து சாதனை படைத்துள்ளது. இதுகுறித்து, அந்நிறுவனத்தின் இந்திய இயக்குநர் ராஜேஷ் குப்தா புராடக்ட் லாஞ்ச் ஈவென்டின் போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், எங்களது பிராண்டு உலகம் முழுவதும் இன்று பிரபலமாகியுள்ளது. எங்களுடைய தயாரிப்பில் தரமும், நம்பிக்கையும் உள்ளது. ஆனால், சமீப காலமாக எங்கள் பிராண்டுகளை போலவே முத்திரை பதிக்கப்பட்ட போலி மெமரி கார்டுகள், பென்டிரைவ்கள் சந்தைகளில் வெகுவாக புழங்குகிறது. இதனால், எங்கள் நிறுவனத்தின் வருமானம் கடுமையாக சரிந்துள்ளது. அதுபோன்ற போலி மெமரிகார்டுகளை விற்கும் இடங்களில் போலீசுடன் இணைந்து அடிக்கடி சோதனை செய்கிறோம். கடந்த 6 மாதங்களில் மட்டும் 2 இரண்டு இடங்களில் இதுபோன்ற போலி தயாரிப்புகளை கண்டுபிடித்திருக்கிறோம்.

மும்பை, சி.எஸ்.டி ரெயில் நிலையம் அருகில் நிறைய கடைகளில் இவ்வாறு போலி தயாரிப்புகள் விற்கப்படுகிறது. ரெய்டு நடத்துவது தவிர, எங்கள் நிறுவன தயாரிப்புகளை இறக்குமதி செய்வதற்கு சுங்கத்துறையின் அனுமதியை பெற கட்டாயமாக்கியிருக்கிறோம். மேலும், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் பொதுமக்களுக்கு போலி தயாரிப்புகள் விற்கப்படுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றார்.

அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி