ஐ.நா. அமைப்பான உலக சுகாதார நிறுவனத்தின் அவசரநிலை கமிட்டி கூட்டம், ஜெனீவாவில் 2 நாட்களாக நடைபெற்றது. அதன் முடிவில், எபோலா நோயை கட்டுப்படுத்த, உலகளாவிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது.இந்நிலையில் ஐக்கிய நாடுகள் அவையின் சுகாதார அமைப்பான உலக சுகாதார நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,எபோலோ தொற்று நோய் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,461 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்துள்ளது. அதேபோல் இந்நோய் பாதிப்புக்கு 4,985 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று வாரங்களில் கினியா, லினியா, சீயரோ லியான் உள்ளிட்ட நாடுகளில் மேற்கண்டா பாதிக்கப்பட்டுள்ள மக்களின் எண்ணிக்கையில் பாதியை தாண்டி உள்ளது என்று உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி