இந்த நோயின் தாக்கத்துக்கு பலியானோரின் எண்ணிக்கை 2461 ஆக உயர்ந்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் சரிபாதி நோயாளிகள் கடந்த ஒருமாத காலத்தில் பலியாகியுள்ளனர்.இந்த நோய்க்கான தடுப்பு மருந்து மற்றும் குணப்படுத்தும் மருந்து ஆகியவற்றை கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல நாடுகள் மும்முரமாக ஈடுபட்டுவரும் நிலையில், ஆப்பிரிக்க நாடுகளில் எபோலாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கு மருத்துவ சேவையாற்றும் ஊழியர்களின் செலவினங்களை சமாளிக்க ஒரு கோடி டாலர்களை வழங்குவதாக அமெரிக்க அரசு கடந்த வாரம் அறிவித்துள்ளது.
இந்த தொகையுடன் சேர்த்து எபோலா ஒழிப்பு பணிகளுக்காக அமெரிக்க அரசு இதுவரை 10 கோடி டாலர்களுக்கும் அதிகமான நிதியை வழங்கியுள்ளது.இதே பணிக்காக ஏற்கனவே மிகப்பெரிய தொகையை நிதியாக வழங்கியுள்ள ஆஸ்திரேலியா அரசு, மேலும் 70 லட்சம் ஆஸ்திரேலிய டாலர்களை உடனடியாக வழங்குவதாக அறிவித்துள்ளது.
அனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி